Saturday, February 16, 2013
Thursday, February 14, 2013
விதியின் பிடியில் வினோதினி !!!
மலர வேண்டிய பூக்களுக்கு
மரணமே பரிசாக !!!
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி
பார்த்த காலங்கள் கடந்துவிட்டது
அகிம்சம் வளர்த்த பூமியில்
அமிலங்களின் ராஜ்யம் ..
பற்றாகுறை சட்டத்தில் இல்லை
பார்க்கும் கண்களில் ..
பொறுமையின் கூட்டிற்குள் குடிகொண்ட
போராட்டங்கள் ..
மெல்லிய மனதிற்குள்
மரணவாசலில் வீரவசனங்கள் !!!
எங்களின் மனங்களில் மலர்ந்து
மடிந்து போன மாதுவே...
உன் மரணமாவது விதைக்குமா ?!!!
மனிதர்களின் மனங்களில் மாற்றங்களை !!!
மரணமே பரிசாக !!!
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி
பார்த்த காலங்கள் கடந்துவிட்டது
அகிம்சம் வளர்த்த பூமியில்
அமிலங்களின் ராஜ்யம் ..
பற்றாகுறை சட்டத்தில் இல்லை
பார்க்கும் கண்களில் ..
பொறுமையின் கூட்டிற்குள் குடிகொண்ட
போராட்டங்கள் ..
மெல்லிய மனதிற்குள்
மரணவாசலில் வீரவசனங்கள் !!!
எங்களின் மனங்களில் மலர்ந்து
மடிந்து போன மாதுவே...
உன் மரணமாவது விதைக்குமா ?!!!
மனிதர்களின் மனங்களில் மாற்றங்களை !!!
Wednesday, November 28, 2012
Saturday, September 15, 2012
Sunday, August 5, 2012
Sunday, March 25, 2012
Saturday, March 3, 2012
நட்பு ...
சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...
தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...
தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...
ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...
என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!
பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!!
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...
தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...
தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...
ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...
என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!
பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!!
Subscribe to:
Posts (Atom)